ADDED : டிச 28, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தரப்பில் இருக்கும் அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, கடந்த சில வாரங்களாக, பா.ம.க., தலைவர் அன்பு மணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இனி அன்புமணியுடன் இணைந்து செயல்படுவதில்லை என்ற முடிவுக்கு ஜி.கே.மணி வந்து விட்டார். அதனால், ராமதாசை தி.மு.க., கூட்டணியில் சேர வைத்து, தான் எம்.எல்.ஏ.,வாகி விடலாம் என கணக்கு போட்டு உள்ளார் மணி.
தி.மு.க., கூட்டணியில் ராமதாசுக்கு இடமில்லை எனில், தி.மு.க.,வில் நேரடியாக சேர்ந்து எம்.எல்.ஏ., ஆகி விடலாம் என்ற எண்ணத்திலும் ஜி.கே.மணி இருக்கிறார்.
அதனால் தான் அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

