ADDED : செப் 12, 2025 05:50 AM

'மக்களின் நலனை கருத்தில் வைத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு ௫ ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு ௪ ரூபாய் குறைக்கப்படும்' எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின் அதை செய்யவில்லை.
மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து, எப்படியெல்லாம் விதவிதமாக ஏமாற்றலாம் என, ஒரு போட்டி வைத்தால், அதில் தி.மு.க., மட்டும் தான் தனித்து வெற்றி பெறும்.
'மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ௫ ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு ௪ ரூபாய் குறைக்கப்படும்' என வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும், அதை பற்றி வாயை திறக்காமல் தப்பித்து கொண்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்காமல், விலைவாசியை மட்டும் உயர்த்தி, மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? வரும் தேர்தலில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,