ADDED : டிச 22, 2025 02:08 AM

புதிதாக கட்சி ஆரம்பித்த நடிகர், மேடையில் ஆடிக்கொண்டு, 'போட்டி எங்களுக்கும், தி.மு.க.,வுக்கும்' என்கிறார். அவர் கட்சிக்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லை. பா.ஜ.,வில் 1,287 எம்.எல்.ஏ.,க்கள், 272 எம்.பி.,க்கள் உள்ளனர். தி.மு.க., - பா.ஜ., ஆகியவற்றை சாதாரண கட்சி என நினைக்கிறீர்களா?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். முதல்வர் தொகுதியான கொளத்துாரில் மட்டும், ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக தேர்தலன்று மதியம், 3:00 மணிக்கு மேல், தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுப்போடுவர். இறந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், இத்தேர்தலில், தி.மு.க.,வால் ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது.
முதல்வர் ஸ்டாலின், எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றம் செல்கிறார். தற்போது, 17 அமைச்சர்கள் மாட்டியுள்ளனர். அவர்கள் நீதிமன்றம் செல்ல முடியாது; சிறைக்குத்தான் செல்ல வேண்டும்.
- நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,

