தி.மு.க., - எம்.பி.,க்கு எதிரான ஈ.டி., நோட்டீசுக்கு தடை
தி.மு.க., - எம்.பி.,க்கு எதிரான ஈ.டி., நோட்டீசுக்கு தடை
ADDED : ஆக 19, 2025 05:06 AM

தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து, 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 70 லட்சம் பங்குகளை ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அந்த நோட்டீசுக்கு எதிராக ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு தள்ளுபடியானது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத்துறை நான்கு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

