ADDED : பிப் 28, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் இளைய அருணா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக, எம்.எல்.ஏ., - ஆர்.டி.சேகர், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, பெரம்பலுார் மாவட்ட செயலர் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு, ஜெகதீசன் என்பவர், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
சென்னை வடக்கு மாவட்ட செயலர் இளைய அருணா, பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் போன்ற பணிகளை முறையாக செய்யாததாலும், எம்.எல்.ஏ.,க்களுடன் மோதலில் ஈடுபட்டதாலும், மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலுார் மாவட்ட செயலர் ராஜேந்திரன், உடல் நலக்குறைவு காரணமாக, பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டார்.

