sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்சி கொள்கைகள் அறிவிப்பு

/

கட்சி கொள்கைகள் அறிவிப்பு

கட்சி கொள்கைகள் அறிவிப்பு

கட்சி கொள்கைகள் அறிவிப்பு


ADDED : அக் 28, 2024 12:59 AM

Google News

ADDED : அக் 28, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு துவங்கியது.

மாநாடு மேடைக்கு வந்த கட்சித் தலைவர் விஜய், அங்கு அமைக்கப்பட்டிருந்த, 'ரேம்ப்' வழியே தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி நடந்து சென்று, மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்டிருந்த, 100 அடி உயர கொடிக்கம்பத்தில், கொடி பாடல் இசைக்க, 'ரிமோட்' வாயிலாக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் வாசித்தார்.

அதன் விபரம்:

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்போம்

ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலின அடையாளம் என்ற அடிப்படையில், மனித சமூகத்தை சுருக்கிடக் கூடாது

மக்களை பாகுபடுத்தாமல், சம உரிமைகளை வகுக்க வேண்டும்

மாநில, மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்

விகிதாச்சார ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி ஒதுக்கீடு

எல்லா வகையிலும் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம்

இரு மொழிக் கொள்கைகளே த.வெ.க., மொழிக் கொள்கை

மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது

தமிழை வழக்காடு மொழியாக்குவது

மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைப்பது

பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பது

தமிழகத்தின் பானமாக பதநீர் அறிவிக்கப்படும்

பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது

அரசு, தனியார் துறையில் ஊழலற்ற நிர்வாகம்

போதையில்லாத தமிழகம் படைப்போம்

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம்

அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கதர் ஆடை அணிய வேண்டும்

தமிழகம் முழுதும் புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும்

கவர்னர் பதவி அகற்றப்படும்

காமராஜர் மாதிரி பள்ளிகள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்

தமிழ் வழியில் பயில்வோருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us