ADDED : பிப் 03, 2024 01:39 AM
சென்னை:வரும் 13ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் காங்கிரஸ் தலைவர் கார்கே, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., காங்கிரஸ் இடையே முதல் கட்ட பேச்சு, கடந்த மாதம் 28ல் சுமுகமாக நடந்தது.
வரும் 13ல், கார்கே சென்னை வருகிறார். தேனாம்போட்டை காமராஜர் மைதானத்தில் நடக்கவுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்துகிறார்.
தி.மு.க., காங்கிரஸ் நடத்திய பேச்சில், ஐந்து தொகுதிகள் தர, தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. மேலும், நான்கு தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன.
கார்கே சந்திப்புக்கு பின், காங்கிரசுக்கு ஏழு தொகுதிகள் வரை உறுதி செய்யப்படும் என, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

