ADDED : பிப் 27, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:''லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பா.ஜ., தலைமை தான் முடிவு செய்யும்,'' என, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி கூறினார்.
திருப்பூரில் நேற்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, 'என் மண், என் மக்கள்' யாத்திரையில், சமீபத்தில் காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
காங்., மாநில தலைவராக செல்வப்பெருந்தகை தற்போது தான், பொறுப்பேற்றிருக்கிறார். அவரது செயல்பாடுகளை பார்த்த பிறகே, அவரது விமர்சனத்துக்கு பதில் அளிக்க முடியும். நான், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பா.ஜ., தலைமை தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

