போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டம்
போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டம்
UPDATED : பிப் 11, 2024 02:06 PM
ADDED : பிப் 11, 2024 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ட தேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் இன்று(பிப்.,11) 1000க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
![]() |
கடந்த 17 ஆண்டுகளாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் கண்டதேவி கோயில் தேர் ஓடாமல் இருந்தது. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி இன்று காலை கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.


