ADDED : ஏப் 09, 2025 02:08 AM
சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் உட்பட, ஆறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
கோவை - சென்னை சென்ட்ரல், காலை 6:20 மணி, 'இன்டர்சிட்டி' விரைவு ரயில், வரும் 23, 25, 28ம் தேதிகளில், காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
கர்நாடகா மாநிலம் அசோகாபுரம் - சென்ட்ரல், அதிகாலை 4:45 மணி ரயில், வரும் 23, 25, 28ம் தேதிகளில், காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஜோலார்பேட்டை, மாலை 5:30 மணி விரைவு ரயில், இன்று, 11, 14, 16ம் தேதிகளில், சோமநாயக்கன்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்
சென்ட்ரல் - கோவை, மதியம் 2:35 மணி இன்டர்சிட்டி விரைவு ரயில், வரும் 23, 25, 28ம் தேதிகளில், காட்பாடியில் இருந்து, மாலை 4:15 மணிக்கு புறப்படும்
சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு, மாலை 3:30 மணி லால்பாக் விரைவு ரயில், வரும் 23, 25, 28ம் தேதிகளில், காட்பாடியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்படும்
சென்ட்ரல் - மஹாராஷ்டிரா மாநிலம் சாய் நகர் ஷீரடி, காலை 10:25 மணி விரைவு ரயில், இன்று, 16, 23, 30ம் தேதிகளில், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

