டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
ADDED : டிச 23, 2025 06:57 AM

சென்னை: 'தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில், வரும் 25ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக் கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் சில இடங்களில், இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும்.
சில இடங்களில், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும். 25ம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில், குளிர்காற்று காரண மாக, குறைந்தபட்ச வெப்ப நிலை, இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை குறைவாக பதிவாகக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில், சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

