ADDED : பிப் 24, 2024 12:45 AM
மதுரை:தஞ்சாவூர் ஜீவகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: விழுப்புரம் - தஞ்சாவூர் வரை ஒற்றை ரயில் பாதையாக உள்ளது.
இது, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணத்தை இணைக்கிறது. இவ்வழித்தடத்தை இரட்டை அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே துறை ஆய்வு செய்தது.
கும்பகோணம் மகாமகம் திருவிழா, 2028ல் நடைபெற உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவர்.
விழுப்புரம் - தஞ்சாவூர் இடையே மயிலாடுதுறை வழியாக இரட்டை அகல ரயில்பாதை அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி, ரயில்வே துறை செயலர், ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரி 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.

