அரசால எல்லாத்துக்கும் நடவடிக்கை எடுக்க முடியலையோ? இசைவாணி விவகாரத்தில் கேட்கிறார் கஸ்தூரி!
அரசால எல்லாத்துக்கும் நடவடிக்கை எடுக்க முடியலையோ? இசைவாணி விவகாரத்தில் கேட்கிறார் கஸ்தூரி!
ADDED : நவ 29, 2024 02:12 PM

சென்னை: சுவாமி ஐயப்பன் இழிவுபடுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அரசால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை போலிருக்கிறது. இது குறித்து என்னால் பேச முடியாது. திங்கள் கிழமை வழக்கு விசாரணைக்கு வருகிறது' என நடிகை கஸ்தூரி பதில் அளித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நடிகை கஸ்தூரி கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன். இரண்டு படம், இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைப் பட்டதோடு மட்டுமல்லாமல் எனது மகனின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. எனவே போலீஸ் ஸ்டேஷனில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன்.
திங்கட்கிழமை தான் இது விசாரணைக்கு எடுத்து கொள்ளபட உள்ளது. இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து ஊடகத்தினர் மற்றும் பொதுமக்களே கேட்கின்றனர். இதிலிருந்து நீங்கள் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம். அரசால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை போலிருக்கிறது.
நடவடிக்கை
இசைவாணி மீது ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் போலீசார் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே இது குறித்து என்னால் பேச முடியாது. சிறையில் புத்தகங்களை படித்தேன். நான் யார் நம்பிக்கையும் கொச்சைப் படுத்தவில்லை. ஒருவர் நம்பிக்கையை கொச்சைப்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

