ADDED : செப் 09, 2025 05:41 AM

ஆரம்ப காலத்தில் இருந்தே, கள்ள ஓட்டுக்கு மிகப் பிரமாண்டமான அங்கீ காரம் கொடுத்தது தி.மு.க., தான். கள்ள ஓட்டை கலாசாரமாக மாற்றிய தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, 'ஓட்டு திருட்டு' என சிதம்பரம் பேசுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கையை மறந்து, தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கின்றன. பட்டியலின சமூகத்தினரை காலில் விழ வைத்தாலும், திருமாவளவனுக்கு எந்தக் கவலையும் கிடையாது. ஆனால், தலித் இன பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்வார்.
மக்களுக்காக தி.மு.க., மட்டுமல்ல; கூட்டணி கட்சியினரும் எதையும் செய்யவில்லை. கூட்டணி கட்சிகளின் கொள்கையை முழுதுமாக மறக்கடித்து, தங்களுடன் கூட்டணியில் வைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., ஜெர்மனியில் தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வருவதற்கு எதிராக இருக்கிறார். அ.தி.மு.க., - பா.ஜ., வலுவான கூட்டணி தான். அ.தி.மு.க., உட்கட்சியில், பிரச்னைகள் வந்தால் அந்த கட்சி தீர்த்துக் கொள்ளும். அதற்கும் பா.ஜ.,வுக்கும் சம்பந்தமில்லை.
-- தமிழிசை,
மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,