ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ
ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ
UPDATED : ஏப் 15, 2024 07:07 PM
ADDED : ஏப் 15, 2024 12:59 PM

சென்னை: தமிழகத்தில் ஏப்.,17 மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 7 மணி வரை பிரசார நேரத்தை நீட்டிப்பு செய்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
தமிழகத்தல் ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாள் (ஏப்.,17) உடன் முடியவுள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை மறுநாள் (ஏப்.,17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஓட்டளிக்கலாம். விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்.

