பூத் ஏஜன்ட்கள் மாநாடு: கோவையில் நடத்த விஜய் முடிவு
பூத் ஏஜன்ட்கள் மாநாடு: கோவையில் நடத்த விஜய் முடிவு
ADDED : ஏப் 11, 2025 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 'பூத்' ஏஜன்டுகள் மாநாட்டை, கோவையில் நடத்த, அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் விஜய், தன் கட்சிக்கு, 120 மாவட்டச் செயலர்களை நியமித்து உள்ளார். இவர்கள் வாயிலாக, மாநிலம் முழுதும் ஓட்டுச்சாவடிகளில் பணியாறும் 60,000 பூத் ஏஜன்டுகளை நியமிக்க பணி நடந்து வருகிறது.
இதையடுத்து பூத் ஏஜன்ட்கள் மாநாட்டை, மண்டல வாரியாக நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார். முதலில் கோவையில் பூத் ஏஜன்ட்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக, சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

