ADDED : டிச 21, 2025 01:32 AM

வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாரித்தது தேர்தல் கமிஷன். நீக்கப்பட்ட வாக்காளர்கள், எந்த ஆண்டு பட்டியலில் சேர்க்கப்பட்டனர் என்பதை பார்க்க வேண்டும்.
பா.ஜ., கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க., 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போது, கள்ள ஓட்டுகள் பற்றி பா.ஜ., கண்களுக்கு தெரியவில்லை; நல்ல ஓட்டுகளாக தெரிந்தன; இப்போது கள்ள ஓட்டுகளாக தெரிகிறதா?
லோக்சபா தேர்தலில் ஏகப்பட்ட வாக்குறுதிகளை பா.ஜ., அள்ளி வீசியது. மத்திய பா.ஜ., ஆட்சியில், தமிழகத்துக்கு ஏதேனும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதா? மெட்ரோ ரயில், எய்ம்ஸ் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை.
தமிழக வளர்ச்சியில் பா.ஜ.,வுக்கு துளியும் அக்கறையில்லை. கோவையில் 10 தொகுதிகளையும், தி.மு.க.,வுக்காக வென்று காட்டுவேன். ஐந்து முறை கரூரில் போட்டியிட்டு வென்ற நான், வேறு தொகுதிக்கு செல்ல மாட்டேன்.
- செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,

