பிரதமர் மோடிக்காக 22 கி.மீ.,க்கு பா.ஜ., கொடி, தோரணம்: மக்கள் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடிக்காக 22 கி.மீ.,க்கு பா.ஜ., கொடி, தோரணம்: மக்கள் உற்சாக வரவேற்பு
ADDED : ஏப் 07, 2025 05:56 AM
ராமேஸ்வரம் : பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ., வினர் 22 கி.மீ.,க்கு பா.ஜ., கொடி, தோரணங்கள் அமைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க இலங்கையில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் மண்டபத்தில் வந்திறங்கினார் பிரதமர் மோடி.
பிரதமரின் பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு வரிசையாக வந்தன.
மேலும் பிரதமரை வரவேற்க ராமேஸ்வரம் - மண்டபம் வரை 22 கி.மீ., க்கு பா.ஜ., கொடிகளை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஊன்றி ஆங்காங்கே தோரணங்கள் அமைத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த பிரதமரை சாலை ஓரத்தில் காத்திருந்த ஏராளமான மக்கள் கையசைத்து உற்சாகமாக வரவேற்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேரன் ேஷக் சலீம், பா.ஜ., பொருளாதார பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் சண்முக நாதன், ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர் சந்திரகுமார், ராமேஸ்வரம் நகர் பா.ஜ., தலைவர் மாரி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் நாகேந்திரன், முன்னாள் நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு.
முன்னாள் கவுன்சிலர்கள் சுந்தர்வாத்தியார், மாரிபிச்சை, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் மலைச்சாமி, தமிழ் இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகலிங்கம், ஓ.பி.சி., அணி மாவட்ட துணைத் தலைவர் கணேசன், நகர் பொதுச் செயலாளர் ரவிக்குமார், நகர் துணைத் தலைவர்கள் சங்கிலிகுமரன், சுரேஷ், ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் பாலாஜி வாத்தியார், நகர் வர்த்தக அணி தலைவர் தாமோதரன், பா.ஜ., நிர்வாகி சங்கர் சர்மா உட்பட பலர் வரவேற்றனர்.

