அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜன.,24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜன.,24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜன 10, 2024 12:09 PM

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் ஜன 24ம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
2006ம் ஆண்டு திமுக ஆட்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகிய 7 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று(ஜன.,10) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வரும் ஜன 24ம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விடுப்பில் சென்றதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

