ADDED : ஆக 14, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஐ.பி.எம்., நிறுவனம், மாணவர்களுக்கு ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்த இன்டெர்ன்ஷிப் பயிற்சியை வழங்குகிறது .
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.பி.எம்., நிறுவனத்தின், 'ஸ்கில் பில்ட் அகாடமி' சார்பில், பி.இ., -- பி.டெக்., - எம்.சி.ஏ., உள்ளிட்ட துறை மாணவர்களுக்கான, ஆறு வார 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் நேரடி பயிற்சி வழங்கி, அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வம் உள்ள மாணவர்கள், aicte என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

