கிடப்பில் போடப்பட்டுள்ளன அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் கூறுகிறார் அர்ஜுன் சம்பத்
கிடப்பில் போடப்பட்டுள்ளன அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் கூறுகிறார் அர்ஜுன் சம்பத்
ADDED : அக் 17, 2024 01:57 AM

சிவகாசி:''அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பல திட்டங்கள், தற்போதைய, தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன,'' என, சிவகாசியில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, முதல்வர் ஸ்டாலின், 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி சென்று விட்டார்.
பட்டாசு தொழிலில் கடந்த காலத்தில் இருந்த பிரச்னைகள் தற்போது குறைந்துள்ளன; ஆனால், முழுமையாக மாறவில்லை.
சரவெடி மற்றும் சில பட்டாசு மூலப்பொருட்களுக்கு தடை விதித்துள்ளதால், பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சரவெடிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி சோதனைக்கு வருவதால், பட்டாசு உற்பத்தியாளர்கள் இடையூறுகளுக்கு ஆளாகின்றனர். தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்னையாக இருந்த சிகார் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், சீனாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுகின்றன.
அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பல திட்டங்கள், தற்போதைய, தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., பொருளாதார பிரிவு மாநில செயலர் முத்துராமலிங்கம், கட்சியினர் உடன் இருந்தனர்.

