'பெங்கால் பைல்ஸ்' பாருங்க முதல்வர் ஸ்டாலினுக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை
'பெங்கால் பைல்ஸ்' பாருங்க முதல்வர் ஸ்டாலினுக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை
ADDED : செப் 12, 2025 03:06 AM

கோவை:' பெங்கால் பைல்ஸ் திரைப்படத்தை தமிழக முதல்வர் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்' என, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கொல்கட்டாவில் முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா துாண்டுதலால், சுதந்திரத்துக்கு முன் கடந்த 1946 ஆக., 16ல் நடந்த தாக்குதல்களில், ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
கொல்கட்டா படுகொலையை மையக்கருத்தாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் பெங்கால் பைல்ஸ் .
சென்சார் போர்டு தணிக்கை செய்து, அனுமதி கொடுத்தபோதும், மேற்கு வங்கத்தில் அப்படத்தை திரையிட, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சி தடை விதித்துள்ளது.
தற்போது மேற்கு வங்கத்தில் பல பகுதிகளில் ஹிந்துக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இண்டி கூட்டணி கட்சியினர், குறிப்பாக, தி.மு.க., - காங்., - கம்யூ., கட்சியினர் இப்படம் திரையிடுவதை விரும்பவில்லை.
உண்மை வரலாற்றை தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் பெங்கால் பைல்ஸ் .
விவேக் அக்னிகோத்ரி இயக்கிய இப்படத்தை, தமிழக முதல்வர், குடும்பத்துடன் பார்க்க வேண்டும். தமிழ் திரைப்பட துறையினரும் இந்த படத்தை பார்த்து, தங்கள் கருத்துகளை கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.