ADDED : பிப் 20, 2024 01:03 AM
கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுகாட்டில், கலைஞர் பன்னாட்டு அரங்கம், 3 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்படும். இதில், 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு கூடம், 10,000 நபர்கள் பார்வையிடும் வசதி உடைய கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகள், கலை அரங்குகள் இடம்பெறும்
புதுடில்லியில், 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் விருந்தினர்கள், அலுவலர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் தங்குவதற்கு உரிய வசதிகளுடன், திராவிட கட்டட கலை அமைப்பில், புதிதாக விருந்தினர் இல்லம் கட்டப்படும்
மதுரை ஜல்லிகட்டு அரங்கத்தில், தமிழர்கள் வரலாறு, பண்பாடு, கலைகளை ஒரே இடத்தில் அரங்கேற்றம் செய்யும் வகையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்
புதிய கட்டட வடிவமைப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும். கட்டட வடிவமைப்பில் அழகியல், நவீன தொழில்நுட்பம், பசுமை கட்டுமானம் ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்தும் கொள்கையாக இது அமையும்.

