ADDED : பிப் 20, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வில், நெடுஞ்சாலைத் துறைக்கு உதவிப் பொறியாளர்களாக, 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வேலு வழங்கினார். நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் சாந்தி, இணை இயக்குனர் விமலா பங்கேற்றனர்.

