ADDED : பிப் 26, 2024 03:14 AM

சென்னை : பா.ஜ.,வில் இணைந்த விஜயதரணி,விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதியில், மூன்றாவது முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர், கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தார்.
நேற்று முன்தினம், காங்கிரசில் இருந்து விலகி, மத்திய இணை அமைச்சர் முருகன் ஏற்பாட்டில், டில்லியில் பா.ஜ., தலைவர்களை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
இவருக்கு, கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக, சபாநாயகர் அப்பாவுவிற்கு, விஜயதரணி கடிதம் அனுப்பினார். இந்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, அப்பாவு நேற்றுஅறிவித்தார்.
இதையடுத்து, விளங்கோடு தொகுதிகாலியாகவுள்ளதாக, சட்டசபை செயலகம் வாயிலாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. வரும் லோக்சபா தேர்தலுடன், இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

