sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-30

/

தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-30

தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-30

தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-30


ADDED : டிச 14, 2024 06:47 PM

Google News

ADDED : டிச 14, 2024 06:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

நலமுடன் வாழ...


தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே உள்ளது நயினாரகரம் சிவன் கோயிலில் திருவாரியன் தர்மசாஸ்தா என்னும் பெயரில் பிரம்மச்சாரி ஐயப்பன் இருக்கிறார். இவரை தரிசித்தால் மனநலம், உடல்நலம் பெருகும். 500 ஆண்டுகளுக்கு முன்பே வேதம் ஓதும் அந்தணர்கள் இங்கு குடியிருந்தனர். மக்கள் அவர்களை 'நைனார்' என அழைத்தனர். அதனால் நைனார் அகரம் என அழைக்கப்பட்ட இப்பகுதி தற்போது நயினாகரம் என்றானது. இப்பகுதியில் இருந்த தேவதைகள், பூதங்கள் தங்களுக்குரிய அவிர் பாகங்களை அந்தணர்களின் யாகத்தில் பெற்று வந்தன.

இதை தடுக்க ஆரியங்காவு ஐயப்பனை அந்தணர்கள் சரணடைந்தனர். பூதநாதனான ஐயப்பன் பூதங்களை கட்டுப்படுத்தி இத்தலத்தில் மேற்கு நோக்கியபடி ஒருகால் குத்துக்காலிட்டும், ஒரு காலை தொங்கவிட்டும் அபயமளித்தபடி பிரம்மச்சாரியாக அருள்புரிகிறார்.இப்பகுதி மக்களின் குலதெய்வமான இவர், கேரளா ஆரியங்காவிற்கு நேரெதிரே இருப்பது சிறப்பு. மார்கழி மாத மண்டல பூஜையும், தமிழ் மாதப்பிறப்பன்று பூஜையும் விமரிசையாக இங்கு நடக்கும்.

தென்காசி - மதுரை சாலையில் 10 கி.மீ., தொலைவில் இடைகாலுக்கு முன்பு உள்ளது நயினாகரம்.

நேரம்: காலை 8:00 -10:00 மணி

தொடர்புக்கு: 98947 12408, 70100 56505

அருகிலுள்ள தலம்: அலர்மேல்மங்கை தாயார் வெங்கடாஜலபதி பெருமாள்

நேரம்: காலை 8:00 - 10:00 மணி






      Dinamalar
      Follow us