ADDED : பிப் 20, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், 2.24 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. நேற்று தாக்கல் செய்த தமிழக அரசின் பட்ஜெட்டில், வரும் நிதியாண்டில் நிலுவையில் உள்ள கடன், 8.33 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
இந்த மொத்த கடனை, ரேஷன் கார்டு எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால், ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் அரசு, 3.72 லட்சம் ரூபாய் கடனை வைத்துள்ளது.
மழைநீர் சேமிப்பு
மழைநீரை முறையாக சேமிக்கவும், பாசனத்திற்கு நீரை உறுதி செய்யவும், தரை கீழ் தடுப்பணை, கால்வாய் சீரமைப்பு, புதிய அணைகட்டு ஆகியவை, 734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
மாநிலத்தில் உள்ள நீர்வளங்களின் மேலாண்மையை திறம்பட கையாள, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீர்வளத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு விரைவில் துவங்கப் படும்.

