லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசு அல்ல... எதிர்காலத்தை ஆள்வதற்கான வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்
லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசு அல்ல... எதிர்காலத்தை ஆள்வதற்கான வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜன 05, 2026 07:49 PM

சென்னை: '' லேப்டாப் பரிசு பொருள் கிடையது. உலகத்தை நீங்கள் ஆட்சி செய்ய உங்களுக்கு வந்துருக்கும் வாய்ப்பு.எங்களை பொறுத்தவரை இது செலவுத்திட்டம் கிடையாது. எதிர்கால தலைமுறை கல்வியில் செய்யப்படும் முதலீடு'', என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்கட்டமாக, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும், 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 05) தொடங்கி வைத்தார்.
பாசிட்டிவ் எனர்ஜி
லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிக்கு எதற்கு உலகம் உங்கள் கைகளில் கொடுத்துள்ளோம். இது வெறும் தலைப்பு அல்ல. எதிர்காலமே உங்கள் கையில் தான் உள்ளது. அதை உரக்கச் சொல்ல உணர்த்தத் தான் இத்தனை பேர் இந்த விழாவிற்கு வந்துள்ளீர்கள். புத்தாண்டை புத்துணர்வு மிக்க மாணவர்களோடு துவங்குவது 'பாசிட்டிவ் எனர்ஜி' கொடுக்கிறது. அடுத்த தலைமுறையான உங்களை மனதில் வைத்து இந்த விழாவை ஏற்படுத்தி உள்ளோம்.
ஏன் இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துகிறோம். ஏன் இந்த மாதிரி திட்டங்களை செயல்படுத்துகிறோம்.மாணவர்களை வளர்த்தால் தான் மாநிலம், நாடு வளரும். இதனால் தான் திமுக ஆட்சியில் நான் முதல்வன், புதுமைப்பெண் , லேப்டாப் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் வழங்குகின்றனர்
இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்து ஒட்டு மொத்த உலகத்தையும் கைகளுக்கு எட்டக்கூடிய தொலைவுக்கு கொண்டு வந்துவிட்டது. அதை உங்க கைகளில் கொண்டு வந்து கொடுப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. 20 லட்சம் லேப்டாப்கள் இளைய சமுதாயத்துக்கு வழங்கப்போகிறோம். அதன் முதற்கட்டமாக இன்று 10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளோம்
முன்னணியில் தமிழர்கள்
திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம். அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கம். அதனால் தான் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அடுத்த தலைமுறைக்கு உடனுக்கு உடன் கிடைக்க நமது ஆட்சி செயல்படுத்துகிறது. 25 ஆண்டுக்கு முன்னரே, இனி வரும் காலம் தொழில்நுட்ப காலம். கம்ப்யூட்டர் காலம் என ஐடி கொள்கை, டைடல் கொள்கையை கொண்டு வந்தார் கருணாநிதி. அதனால் தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.
தமிழர்களான நாம் எப்போதும் கடந்த கால பெருமைகளையும் பேசுவோம். எதிர்கால பெருமைக்காகவும் உழைப்போம் .ஒரு போதும் போலி பெருமைகளை பேசி தேங்கிவிட மாட்டோம். அதற்கு உதாரணம் தான் இந்த விழா.
உங்களும் பகுத்தறிவும், திறனும், அறிவியல் பார்வையும் என்க்ரிப்ட் செய்யப்பட்டால் தான் புது புது கண்டுபிடிப்புகள் வளரும். தொழில்நுட்பம் வளரும். மனிதஇனம், நெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்தில்இதுபோதும், இவ்வளவுதான் நமக்கு தெரியும் என சுணங்கி இருந்தால் விண்வெளியில் சாதனை படைத்திருக்க முடியாது.
இரண்டாவது நெருப்பு
மனிதர்களுக்கு காலம் கொடுத்து இருக்கும் இரண்டாவது நெருப்பு தான் ஏஐ.அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் கைகளில் லேப்டாப் கொடுத்து இருக்கிறோம்.எனது எண்ணம் எல்லாம். நீங்கள் என்ன படிக்கின்றீர்கள்? எத்தனை பட்டம் வாங்குகின்றீர்கள்? என்ன வேலைகளில் உயர்பதவிகளில் இருக்கிறீர்கள்? சொந்தமாக தொழில் நடத்துகிறீர்களா?. உங்களால் எத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடிகிறது? இந்த சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியும்?
இளைய சமுதாயம் மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும். எல்லாரையும் வாழ வைக்க வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் எண்ணம்.இன்றைக்கு, உங்கள் கைகளுக்கு வந்திருக்கும் லேப்டாப் பரிசு பொருள் கிடையது. உலகத்தை நீங்கள் ஆட்சி செய்ய உங்களுக்கு வந்துருக்கும் வாய்ப்பு.எங்களை பொறுத்தவரை இது செலவுத்திட்டம் கிடையாது. எதிர்கால தலைமுறை கல்வியில் செய்யப்படும் முதலீடு.நீங்கள் படிப்பதற்கான எல்லா வாய்ப்பையும் உருவாக்கி தருவோம்.
தொழில்நுட்பம்
தினமும் வளர்ச்சிகள் வந்து கொண்டுள்ளது. பட்டம்படிப்பதோடு, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தி கொண்டு இருக்க வேண்டும்.இனிமேல் டெக்னாலஜி படிக்க வேண்டும் என்பது வாய்ப்பு கிடையாது. உங்கள் துறைகளில் நிலைத்து நிற்க அவசியமாகிறது.தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. அனைவரது கைகளிம் வந்துவிட்டது. அதனை முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
முட்டாள்களின் பாதை
ஏஐயால் ஒரு போதும் மனிதர்களை ரீப்ளேஸ் செய்ய முடியாது. நமது வேலைகளை இன்னும் சிறப்பாக செய்ய துணை நிற்கும். திறன் அடிப்படையில் வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளது. முந்தைய இளைஞர்கள் அறிவுக்காக புத்தகத்தை தேடி அலைய வேண்டும். அறிவை தற்போது எந்த இடத்திலும் இருந்து கொண்டு பெறலாம். இந்த வளர்ச்சியை குறை சொல்லி முடங்கிப்போவது முட்டாள்களின் பாதை. இதை பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தை தொட வேண்டியதுதான் உங்களின் வேலை.லேப்டாப்பை படம் பார்க்க, விளையாட பயன்படுத்த போகிறீர்களா?அல்லது வாழ்க்கை எதிர்காலத்துக்கான 'லாஞ்ச் பேட்' ஆக பயன்படுத்தபோகிறீர்களா?
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது என இரண்டு உள்ளது. எதை தேர்வு செய்கிறீர்களோ அதை பொறுத்து வெற்றிவந்து சேரும்.எந்த துறையில் தேர்வு செய்தாலும் வெற்றி பெற வேண்டும். வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் பொருளாதாரத்த பார்க்க வேண்டும். இரட்டை இலக்க வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம்.பொங்கல் கொண்டாட 3 ஆயிரம் கொடுக்கிறோம் வேலை கிடைக்க உலகளவில் தொழிற்சாலை கொண்டு வருகிறோம்.
துணை நிற்போம்
இரட்டை இலக்க வளர்ச்சி காரணமாக தான். உலக பத்திரிகையை தமிழகத்தை சூப்பர் மாநிலம் என சொல்கின்றனர்.இன்னும் வளர்ச்சி வேண்டும்.நீங்களும் வெற்றி பெற்று வாருங்கள். நாங்களும் வெற்றி பெற்று வருவோம். உங்களுடன் துணை நிற்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இலவச 'லேப்டாப்' பில் உள்ள வசதிகள் என்னென்ன?
* 14 மற்றும் 15 அங்குல திரையுடன், 'இன்டெல் ஐ3' மற்றும் 'ஏஎம்டி ரேடியான் 3 பிராசஸர்' இடம் பெற்றுள்ளன
* 8 ஜி.பி., ராம், 256 ஜி.பி., எஸ்.எஸ்.டி., சேமிப்பு திறன்
* விண்டோஸ் 11 மற்றும் பாஸ் லினக்ஸ் மென்பொருள் வசதி
* மாணவர்களின் கல்வி செயல்பாடுக்காக, எம்.எஸ்., ஆபீஸ் 365 வசதி
* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு 'பெர்பிளெஸ்சிட்டி ப்ரோ' ஏ.ஐ., சந்தா 6 மாதம் இலவசம்.

