ADDED : டிச 14, 2024 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: கப்பலில் பயன்படுத்தும் மிதவை புதுச்சத்திரம் அருகே கரை ஒதுங்கியதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வேலங்கிராயன்பேட்டை கடற்கரையில் கப்பலில் பயன்படுத்தும் மிதவை (போயா) நேற்று கரை ஒதுங்கியது.
இதனை அப்பகுதி மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்து, வி.ஏ.ஓ., மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடற்படை போலீசார் மிதவையை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கப்பலில் பயன்படுத்தும் மிதவை கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

