செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி
UPDATED : மே 15, 2024 07:22 AM
ADDED : மே 15, 2024 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம், மதுராந்தகம் பகுதிகளில் இன்று (மே15) அதிகாலை நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியாகினர்.
புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற கார், கல்பாக்கம் அருகே இ.சி.ஆர்., சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் விக்கி, ஏழுமலை, ராஜேஸ் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மற்றொரு சம்பவத்தில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பெண் உட்பட 4 பேர் பலியாகினர். இவ்விபத்தில் கடலூரைச் சேர்ந்த ஜெய் பினிஷா, சரவணன், மிஷால், பைசல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

