UPDATED : ஜன 24, 2024 09:37 PM
ADDED : ஜன 24, 2024 07:09 PM
தருமபுரி: தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லாரி மூன்று கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி இடையே சிக்கி இருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்து சுமார் ஏழு பேர் தீப்பிடித்து எரிந்து நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது இதில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது இதனால் போக்குவரத்து கடுமையாக தர்மபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று மீட்டுப் பணியிலும் போக்குவரத்தை சரி செய்ய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காரில் தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.இறந்தவர்களின் விபரங்கள் முழுமையாக தெரியவில்லை மீட்பு பணிகள் முடிந்து பின்பு தெரியவரும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்த விபத்தி் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

