ADDED : டிச 19, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காவல் துறைக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, குரூப் -1 தேர்வு நடத்தி, டி.எஸ்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாறு, 2001 - 2005 வரை தேர்வு செய்யப்பட்டு, தற்போது எஸ்.பி., நிலையில், 26 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பட்டியல், மத்திய அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ்., அந்தஸ்து பெறும் பட்டியலில், லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., விமலா, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., டாக்டர் சுதாகர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

