வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு; 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு; 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்
ADDED : டிச 25, 2025 06:04 AM

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 1.65 லட்சம் பேர் மனு அளித்து உள்ளனர்.
தமிழகத்தில் எஸ்.ஐ. ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன், தமிழகத்தில், 6.41கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
தற்போது, 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நேற்று வரை பெயர் சேர்க்க, 1.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வரும் ஜன., 18 வரை விண்ணப்பிக்கலாம்.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வரும் 27, 28ம் தேதிகளிலும், ஜன., 3, 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித் துள்ளது.

