ADDED : மார் 10, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கலைஞர் தமிழ் குறித்த, 100 நுால்களை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கருணாநிதி நுாற்றாண்டையொட்டி, 'கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை' சார்பில், திருவையாறு தமிழ் ஐயா வெளியீட்டகத்தால், 'கலைஞர் தமிழ்' 100 நுால்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இந்நுால்களை, நேற்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நுால்களை படைத்தவர்களில், 62 பேர் பெண்கள். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிர மணியன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

