ADDED : மே 20, 2024 12:38 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, கே.மோரூர் லேண்ட் காலனியை சேர்ந்தவர் விஜயா, 50; கூலி தொழிலாளி. இவருடன், கேரளாவில் மரம் ஏறும் தொழிலாளி செல்வம், 55 வசித்து வந்தார். நேற்று வீட்டில், விஜயா கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தீவட்டிப்பட்டி போலீசார் கூறியதாவது:
விஜயாவுடன் வசித்த செல்வத்துக்கு ஒரு பெண்ணுடன் திருமணமாகி இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அந்த பெண், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். பின், விஜயாவை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் செல்வம் குடும்பம் நடத்தி வந்தார்.
செல்வம், கேரளாவில் இருந்து இரு நாட்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் விஜயாவை கொன்று தப்பி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தலைமறைவாக உள்ள செல்வத்தை தேடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

