விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியா?: அன்புமணி பதில்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியா?: அன்புமணி பதில்
UPDATED : ஜூன் 13, 2024 03:23 PM
ADDED : ஜூன் 13, 2024 02:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடுவது பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்' என அக்கட்சி தலைவர் அன்புமணி கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. திண்டிவனத்தில் நிருபர்கள் சந்திப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடுமா? என அன்புமணியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ‛‛ பா.ம.க., போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும். பா.ம.க., நிர்வாகிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது'' என அன்புமணி பதில் அளித்தார்.

