3 ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை?: முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
3 ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை?: முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
UPDATED : ஏப் 07, 2024 01:08 PM
ADDED : ஏப் 07, 2024 12:52 PM

வேலூர்: ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை?. 3 ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை? என முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: திமுக, அதிமுக, பா.ஜ., புது சின்னத்தில் போட்டியிட முடியுமா?. இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்தால் தமிழகத்தில் பா.ஜ., வளராது. 20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட போது திமுக, அதிமுக வேடிக்கை பார்த்தன.
ஏன் செய்யவில்லை?
எனக்கு ஆசிரியப் பெருமக்களின் ஆதரவு பெருகுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களிடம் படித்த மாணவர்களின் ஓட்டுகள் எனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை?. 3 ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை?.
பொய்யான வாக்குறுதி
தற்போதைய திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் போராடினார்கள். போராடிய ஆசிரியர்களை அடக்கி, ஒடுக்கி , அடைத்து வைத்தார்களே தவிர இதுவரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசு லோக்சபா தேர்தலுக்காக மீண்டும் பொய்யான வாக்குறுதியை கொடுக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

