ADDED : ஏப் 15, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், 'ஜூம்' இணையதளம் வாயிலாக, நேற்று மக்களுடன் பேசினார். அப்போது, சில விஷமிகள் ஆபாச படங்களை பதிவிட்டுள்ளனர். இதற்கு, தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு:
'இன்று, 'ஜூம்' இணையதள மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை ஜூம் மீட்டிங்கில் பரவ விட்டு, உடனே மக்களுடன் நான் பேசுவதை தடுத்து விட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

