ADDED : ஏப் 28, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே டூவீலர் விபத்தில் சிக்கி 10ம் வகுப்பு மாணவர் மனோஜ் 15, பலியானார்.
சாத்துார் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கவுதம் 22, சரண்ராஜ் 22, மனோஜ் 15. மூவரும் நண்பர்கள். இதில் மனோஜ் 10ம் வகுப்பு படித்தார். மூவரும் நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு உப்பத்துார் விலக்கில் உள்ள டீ கடைக்கு சென்று விட்டு டூவீலரில் ஊர் திரும்பினர். கவுதம் டூவீலரை ஓட்டினார்(ஹெல்மெட் அணிந்திருந்தார்). மற்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லை.
கோவில்பட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்ற போது எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரி அருகில் ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்தது. மூவரும் காயமடைந்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மனோஜ் பலியானார்.

