UPDATED : ஜூலை 30, 2024 09:38 AM
ADDED : ஜூலை 30, 2024 07:55 AM

சென்னை: 'அந்திமழை' இலக்கிய இதழின் நிறுவனர் இளங்கோவன், 54, நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.
திருநெல்வேலியில் பிறந்து, கால்நடை மருத்துவம் படித்த இவர், செல்லப்பிராணிகளுக்கான உணவு, அலங்கார பொருட்கள் விற்பனையகத்தை துவக்கி, பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்தார்.
மாணவ பருவத்தில் கையெழுத்து பத்திரிகை நடத்தியதால், இதழியல் ஆர்வம் குறையாமல், தன் சொந்த தொழிலை விட்டு, பல்வேறு பருவ இதழ்களில் பணியாற்றினார்.
சொந்தமாக, 'அந்திமழை' என்ற இலக்கிய இதழை நடத்தி, படைப்பாளர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். இவர், 'கரன்சி காலனி, ஊர்கூடி இழுத்த தேர், மொழியை கொலை செய்வது எப்படி' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளார்.
பெங்களூரில் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.
அவரின் இறுதிச் சடங்குகள், பெங்களூரில் நேற்று நடந்தன. இவரின் மறைவுக்கு எழுத்தாளர்களும், அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

