ADDED : மே 20, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் சாதிக் பாஷா, 27; கடலாடியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 27; இருவரும், மினி லாரியில் சென்று பூண்டு வியாபாரம் செய்து வந்தனர்.
நேற்று முன்தினம், வேலுார் அதன் சுற்றுப்பகுதியில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு, 11:00 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
போளூர் பைபாஸ் சாலை அருகே சென்றபோது, வேலுாரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பஸ், லாரி மீது மோதியது.
அதில், சாதிக்பாஷா, வெற்றிச்செல்வன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

