கோவில்பட்டி அருகே மின்கம்பியில் உரசிய டிராக்டர் - தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - டிரைவர் காயம் -போலீசார் விசாரணை
கோவில்பட்டி அருகே மின்கம்பியில் உரசிய டிராக்டர் - தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - டிரைவர் காயம் -போலீசார் விசாரணை
ADDED : ஏப் 17, 2024 07:05 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பகுதியில் தனியார் காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெற்ரு டருன.
இதற்காக மின்கம்பம் அமைக்கும் பணிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குரு பிரசாத் என்பவர் டிராக்டர் வைத்து ஈடுபட்டு வருகிறார். இன்று வழக்கம் போல மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தக்கூடிய டிராக்டரை குரு பிரசாத் எடுத்துச் சென்றபோது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி உரசியதாக கூறப்படுகிறது. இதனால் தீ பற்றி டிராக்டர் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இதில் குரு பிரசாத்தும் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் தீயணைப்புத் துறை என விரைந்து வந்து தீப்பற்றி எரிந்த டிராக்டரில் தீயை அணைத்தனர். காட்டுப்பகுதியில் தீ ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

