ADDED : ஏப் 11, 2024 09:20 PM
சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, 2024 - 25 கல்வியாண்டுக்கான இணையதள நீட் தேர்வு விண்ணப்பம் பிப்., 9ல் துவங்கி, மார்ச் 16ல் நிறைவடைந்தது. இதில், 23 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து உள்ளனர்.
விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள, மார்ச் 18 முதல் 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்பின், பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று, ஏப்., 9, 10ம் தேதிகளில் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வதாக இருந்தால், https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக இன்றைக்குள் செய்ய வேண்டும்.
ஆதார் எண் குறித்த திருத்தங்களை வரும் 15ம் தேதிக்குள் மேற்கொள்ள அவகாசம் உள்ளது. இதுவே, கடைசி வாய்ப்பு என்பதால், மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களை, https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சந்தேகம் இருப்பின், 011 - 4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

