ADDED : ஏப் 01, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், கடந்த, 29ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஈரோடு அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, வேனில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அக்கட்சியை சேர்ந்த, 40 வயது தொண்டர் ஒருவரும், பிரசார வேனின் பக்கவாட்டில் தொங்கியபடி, கோஷமிட்டபடி சென்றார். அப்போது, அந்த நபர் தன் சட்டை பையில் வைத்திருந்த சில்லரை காசுகளை அள்ளி, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வீசி, 'அண்ணன் தங்கமணி வாழ்க...' என, முழக்கமிட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத தங்கமணி சுதாரித்து, அந்த தொண்டரை பார்த்து, 'இப்படியெல்லாம் செய்யக்கூடாது' என, அறிவுரை கூறினார். கட்சியினர் அந்த நபரை அப்புறப்படுத்தினர். இதனால் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

