ADDED : ஆக 19, 2024 07:48 PM

ஊட்டி:கனமழைக்கு ஊட்டி பணிமனையில் சாக்கடை நீருடன் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டியில் நேற்று மாலை, ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. ஊட்டி பணிமனையை ஒட்டி, கோடப்பமந்து பிரதான கால்வாய் உள்ளது. கன மழைக்கு கோடப்பமந்து கால்வாயில் அடித்து வரப்பட்ட கழிவுகள், பஸ் ஸ்டாண்ட் பகுதி பாலத்தில் தேங்கியது. மழை நீருடன், சாக்கடை கலந்து பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் புகுந்தது தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் கிளை 1 மற்றும் கிளை 2 ல், வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் வெளியேறினர். சில பஸ்கள் வாராந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றன. பணிமனை போதிய பராமரிப்பு இல்லாததால் ஊழியர்கள் பீதியுடன் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொது மேலாளர் முரளி கூறுகையில், பணிமனையில் உள்ள குறைபாடுகள் குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்

