எம்.பி பதவி "பவரை" வைத்து எனக்காக எதுவும் செய்யவில்லை: திருமாவளவன் பேட்டி
எம்.பி பதவி "பவரை" வைத்து எனக்காக எதுவும் செய்யவில்லை: திருமாவளவன் பேட்டி
ADDED : ஏப் 09, 2024 05:39 PM

சென்னை: 'எம்.பி. பதவியை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் எனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை' என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
இது குறித்து நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி: ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தை துவங்கி இருக்கிறேன். பா.ஜ.,ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை திட்டம், ரேஷன் கடை ஆகியவை இருக்காது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
20 மணி நேரம் மக்கள் பணி
எம்.பி. பதவியை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் எனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை. 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுடன் இருக்கிறேன். தொகுதியில் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் இருக்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேரை சந்திக்கிறேன். மக்கள் பணி செய்து வருகிறேன். என்னுடைய வாழ்க்கை என்பது திறந்த புத்தகம். எனக்காக நான் நேரத்தை எடுத்து கொண்டது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

