sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு கட்ட இனி உடனடி அனுமதி 'ஆன்லைன்' திட்டம் முதல்வர் துவக்கம்

/

வீடு கட்ட இனி உடனடி அனுமதி 'ஆன்லைன்' திட்டம் முதல்வர் துவக்கம்

வீடு கட்ட இனி உடனடி அனுமதி 'ஆன்லைன்' திட்டம் முதல்வர் துவக்கம்

வீடு கட்ட இனி உடனடி அனுமதி 'ஆன்லைன்' திட்டம் முதல்வர் துவக்கம்

3


ADDED : ஜூலை 23, 2024 03:55 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 03:55 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வீடு கட்ட, 'ஆன்லைன்' முறையில் உடனடி அனுமதி பெறும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்து, 10 பேருக்கு அனுமதி ஆணைகள் வழங்கினார்.

நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, 2,500 சதுரடி வரையுள்ள மனையில், 3,500 சதுர அடிக்குள் குடியிருப்பு கட்டடம் கட்ட, எளிதாக அனுமதி பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு, www.onlineppa.tn.gov.in என்ற இணைய தளத்தில், வீடு கட்டுவோர் சுயசான்று அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு ஒற்றை சாளர முறையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். பொது மக்கள் கட்டட அனுமதிக்காக, அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தை தவிர்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கட்டணங்களை செலுத்திய பின், 'கியூஆர்' குறியீடுடன், கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடம் ஆய்வு செய்வதில் இருந்தும், கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, வீட்டு வசதி துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் கணேசன் பங்கேற்றனர்.

12 நிபந்தனைகள் உண்டு


ஆன்லைன் முறையில் வழங்கப்படும் இந்த கட்டட அனுமதி, ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும்

இந்த அனுமதி ஆணையை, சம்பந்தப்பட்ட நிலத்தின் மீதான உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக பயன்படுத்தக்கூடாது

இதில் சம்பந்தப்பட்ட நிலம், ஆக்கிரமிப்பு வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல. தவறான ஆவணங்கள் அடிப்படையில் உரிமை கொண்டாடப்படுவது தெரிந்தால், கட்டட அனுமதி ரத்து செய்யப்படும்

பொது கட்டட விதிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதியை பயன்படுத்த வேண்டும்

உரிமையாளர் தாக்கல் செய்யும் ஆவணங்களை, கட்டட அனுமதி

தொடர்ச்சி 6ம் பக்கம்

2 வீடுகள் கட்டலாம்!

மனையை வாங்கியதற்கான பத்திரம், பட்டா, வில்லங்க சான்று, உரிமையாளரின் ஆதார், கட்டட வரைபடம் ஆகியவற்றின், 'ஸ்கேன்' செய்யப்பட்ட பிரதிகளை, ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்தால் போதும். அடுத்த 30 நிமிடங்களில் கட்டண விபரம் தெரிய வரும். அந்த கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தினால், ஒரு மணி நேரத்தில் கட்டட அனுமதி ஆவணம் வந்து விடும். இந்த அனுமதி அடிப்படையில் தரைதளம், முதல் தளம் மட்டும் கட்டலாம். இரண்டு வீடுகள் மட்டுமே கட்ட முடியும். ஊரக பகுதிகளில் பெரும்பாலானோர் இது போன்ற வீடுகளையே கட்டுவதால், இத்திட்டம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். - எஸ்.பிரபுநிர்வாகி, இந்திய கட்டுனர், வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம்








      Dinamalar
      Follow us