தமிழகத்தில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!
தமிழகத்தில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!
UPDATED : மார் 30, 2024 09:21 PM
ADDED : மார் 30, 2024 08:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வேட்பு மனு வாபஸ் முடிவில் தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 950 பேர் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.
1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 பேர் வாபஸ் பெற்றதால் 950 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 874 ஆண் வேட்பாளர்களும் 76 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
![]() |
![]() |



