ADDED : செப் 17, 2024 05:53 AM

சென்னை : நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும், கோவிலில் எளிமையாக நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
மணிரத்னம் இயக்கிய, ஆயுத எழுத்து படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். பின், ஷங்கர் இயக்கிய, பாய்ஸ் படத்தில் நாயகனானார். சமீபத்தில் வெளியான, இந்தியன் - 2 படத்திலும் நடித்திருந்தார்.
அதேபோல, மணிரத்னம் இயக்கிய, காற்று வெளியிடை படம் வாயிலாக தமிழில் பிரபலமானவர் அதிதி ராவ்.
மகா சமுத்திரம் படத்தில் நடித்த போது, சித்தார்த் உடன் அதிதி ராவ் காதல் வயப்பட்ட நிலையில், இருவருக்கும் இந்தாண்டு மார்ச்சில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், நேற்று ஹைதராபாதில் உள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில், எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் சூழ, சித்தார்த்துக்கும், அதிதி ராவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
திருமண போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அதிதி ராவ், 'நீ தான் என் சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்களும் நீ தான்… என்னுள் பாதி நீ' என, கவிதை மழை பொழிந்துஉள்ளார்.

