sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் சேவைக்கு அவகாசம் குறைப்பு; இழப்பீடு அதிகரிப்பு

/

மின் சேவைக்கு அவகாசம் குறைப்பு; இழப்பீடு அதிகரிப்பு

மின் சேவைக்கு அவகாசம் குறைப்பு; இழப்பீடு அதிகரிப்பு

மின் சேவைக்கு அவகாசம் குறைப்பு; இழப்பீடு அதிகரிப்பு

1


ADDED : ஏப் 04, 2024 02:08 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 02:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தற்போது, மின்சார சேவைகளை விரைந்து மேற்கெகாள்ளும் வகையில் காலக்கெடுவை குறைத்தும்; நுகர்வோருக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தியும் புதிய விதிகளை ஏற்படுத்தி, ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

அதன் விபரம்:

l வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், புதிய மின் இணைப்பு கோரும் இடத்தில், ஏற்கனவே மின் சாதனங்கள் இருக்கும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள், அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். இது இதற்குமுன், 30 நாட்களாக இருந்தது

l மின் இணைப்பு கோரும் இடத்தில் மின்கம்பம் நிறுவ வேண்டும் எனில், 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் எனில், 90 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும்

l குறைபாடு உடைய மீட்டர்களை ஏழு நாட்களுக்குள் மாற்றித் தர வேண்டும்; இது இதற்குமுன், 30 நாட்களாக இருந்தது; மின்கட்டண விகிதத்தை ஏழு நாட்களுக்குள் மாற்றித் தர வேண்டும்.

இதேபோல், பல சேவைகளுக்கான அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு உயர்வு


l புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு, தற்காலிக இணைப்பு, மின் இணைப்பு இடமாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின்கட்டண விகித மாற்றம் சேவைகளை, குறித்த காலத்தில் செய்து தராமல் தாமதம் செய்தால், தினமும் 200 ரூபாயும், எத்தனை நாட்கள் ஆனாலும் அதிகபட்சம், 2,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இதற்குமுன் தினமும், 100 ரூபாயும், அதிகபட்சம், 1,000 ரூபாயாகவும் இருந்தது.

l குறைபாடு உடைய மீட்டரை மாற்றித் தராமல் தாமதம் செய்தால் தினமும், 200 ரூபாய் அதிகபட்சம், 2,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும். இதற்குமுன், 100 ரூபாய் முதல், 1,000 ரூபாயாக இருந்தது

l மின்னழுத்த பிரச்னையை கண்டறிய தாமதம் செய்தால், 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; பின், அதை சரிசெய்ய தாமதித்தால் ஒவ்வொரு நாளும், 100 ரூபாய் என, அதிகபட்சம், 2,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

l நுகர்வோரின் புகார் பதிவு செய்ய தாமதம் செய்தால் தினமும், 50 ரூபாய் என, அதிகபட்சம் 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

l மின்சாதன பழுதால், அதை சரிசெய்து உடனே மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இல்லை எனில், மின்சாரம் இல்லாத ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், 100 ரூபாயும், எவ்வளவு நேரமானாலும் அதிகபட்சம், 2,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

l மின் கட்டணம் செலுத்தாததால் ,மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், கட்டணம் செலுத்திய உடனே மின்சாரம் வழங்கப்பட வேண்டும். தராதபட்சத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 10 ரூபாய் வீதம் அதிகபட்சம், 500 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

இதேபோல், ஒவ்வொரு பிரிவுக்கும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுஉள்ளது.






      Dinamalar
      Follow us